புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா, வரலாற்று நிகழ்வு என்றும், அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை என்றும் கூறினார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவு, துரதிருஷ்டவசமானது என்றும், அந்த விழாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.